சிவகார்த்திகேயன், ராமராஜன் உள்ளிட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட திரைத்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

தமிழ் திரை உலகில் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் 'கலைமாமணி விருது' வழங்கி கௌரவிக்கப்படும். 'தேனிசை தென்றல்' தேவா தலைமையிலான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மூலம் தெரிவுசெய்யப்படும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பட்டியலில் மூத்த நடிகைகள் சௌகார் ஜானகி மற்றும் சரோஜாதேவி, மூத்த பின்னணி பாடகி ஜமுனாராணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு  மற்றும் ஐசரி கணேஷ், மூத்த நடிகர் ராமராஜன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு நடிகை சங்கீதா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, சின்னத்திரை நடிகர் நந்தகுமார், சின்னத்திரை நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா, கொமடி நடிகை மதுமிதா, திரைப்பட இயக்குனர்கள் லியாகத் அலிகான்,  மனோஜ்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரவி மரியா, திரைப்பட வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசை அமைப்பாளர்கள் தீனா மற்றும் ரி. இமான், மேடை மெல்லிசை இசைக்குழு கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குனர் சிவசங்கர் மற்றும் ஸ்ரீதர், சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் ஜாக்குவார் தங்கம் மற்றும் தினேஷ், பாடலாசிரியர்கள் காமகோடியான் மற்றும் காதல் மதி, பின்னணி பாடகி சுஜாதா, பின்னணி பாடகர் அனந்து, ஆடை வடிவமைப்பாளர் ராஜேந்திரன், ஒப்பனை கலைஞர் சண்முகம் மற்றும் சபரிகிரிசன், புகைப்பட கலைஞர் சிற்றரசு, திரைப்பட பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப், திரைப்பட மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலு, திரைப்பட இசைக்கலைஞர்கள் ஷெனாய் இசைக்கலைஞர் பாலேஷ் மற்றும் கிருஷ்ணா பாலேஷ், தபேலா கலைஞர் வி எல் பிரசாத் ஆகிய 41 கலைஞர்களுக்கு இந்த ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.