மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகரான உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.