அம்பாறை மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் 4.0 ரிச்டெர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டது.
அம்பாறை மாவட்டத்தின், பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு ஆகிய கடற்கரை கிராமங்களிலேயே குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.44 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நில அதிர்வால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொதுமக்கள் சிறு பதற்றத்துடன் தாம் இருப்பதாக குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM