சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதல் முறையாக பெண்ணொருவருக்கு தூக்குத் தண்டனை

Published By: Digital Desk 3

19 Feb, 2021 | 03:23 PM
image

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக காதல் தகராறில் 7 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 

இது குறித்து தெரியவருவதாவது,

உத்தரபிரதேசத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம்,  சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு ஷப்னமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷப்னம், கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.

இதைத்தொடர்ந்து ஷப்னமையும், சலீமையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டும், உயர் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டும் உறுதி செய்துள்ளன.

மேலும் ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

மதுராவில் உள்ள சிறையில் பெண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தனி அறை உள்ளது. இந்த அறை 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெண் குற்றவாளிகள் எவரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில் தான் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52