இல்லத்தரசிகளின் உயிர்... அதிலும் குறிப்பாக தொழிலுக்கு வெளியே செல்லாது வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளின் உயிர் என்பது சின்னத்திரையில் ஒலிபரப்பப்படும் நெடுந்தொடர்களே.
இதில் நடிக்கும் பலர் பெரிய நடிகர்களை விட அதிகமான அளவு இல்லத்தரசிகளை தங்களது ரசிகர்களாக கொண்டிருப்பர். ஏனெனில், அவர்கள் நெடுந்தொடர் வாயிலாக தினமும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் உறவினர்கள் போல வந்துவிடுகின்றனர்.
இதனால் அவர்களது மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பதாகவே உள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகை சித்ராவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மட்டுமின்றி சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துக்கொண்டனர்.
சித்தி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக, 2004இல் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
2006இல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
வம்சம், தென்றல் உள்ளிட்ட தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் தொலைக்காட்சி தொடர்களை இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த மயூரி 2005ஆம் ஆண்டு வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாததால் இறப்பதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மண் வாசனையில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.
சொந்த பந்தம் தொடரில் நடித்த நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பில் மூலம் பிரபலமான சித்ரா கடந்த சில நாட்களுக்குமுன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவ்வாறு தொடர்ந்து தொலைக்காட்சி நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா தற்கொலை விவகாரத்தில் அவரது கணவர் மற்றும் உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகளிடம் பொலிஸார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் ‘முல்லை’ என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 09 திகதி இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பிய சித்ரா திடீரென தற்கொலை முடிவை எடுத்து தூக்கில் தொங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேம்நாத்துக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இதன் பிறகு இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு பல நேரங்களில் சித்ராவை ஹேம்நாத் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த அளவுக்கு இருவரும் அன்பாகவே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென பதிவு திருமணம் செய்தது ஏன்? இத்தனை ஆண்டுகளும் திருவான்மியூர் வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்த சித்ரா ஹோட்டலில் தங்கியது ஏன்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகு கரையான்சாவடியில் உள்ள ஹேம்நாத் வீட்டில் சித்ரா தங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகின்றன. மக்கள் மத்தியில் சித்ராவை பிரபலப்படுத்திய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ‘முல்லை’ பாத்திரமே அவரது உயிருக்கு எமனாக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘முல்லை’ பாத்திரத்தில் 3-ஆவது மருமகளாக நடித்த சித்ரா கணவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப் பட்டதாகவும் அதில் ஹேம்நாத்துக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அது மோதலாக மாறி இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கிறார்கள். அதேநேரத்தில் திடீரென பதிவு செய்து கொண்டது ஏன்? என்பதும் பலத்த கேள்வியை எழுப்பி உள்ளது.
ஜனவரி மாதம் வரையில் திருமணத்துக்கு காத்திருக்காமல் சித்ரா- ஹேம்நாத் இருவரும் தங்களது கணவன்- மனைவி உறவை உறுதிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்த விஷயம் எது? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.
திருமணம் நிச்சயமான பிறகு சித்ரா-ஹேம்நாத் திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் முல்லை பாத்திரம் தொடர்பில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு அவரது கணவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த பிரச்சினை தொடர்பாகவும் நசரத்பேட்டை பொலிஸார் அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் சித்ராவின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சித்ராவுடன் நண்பர்களாக பழகிய சின்னத்திரை நடிகர்- நடிகைகளிடமும் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட அன்று படப்பிடிப்பின்போது சித்ரா அடிக்கடி தொலைப்பேசியில் பேசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அன்று முழுவதும் அவர் யார்-யாரிடம் தொலைபேசியில் பேசினார். அவருக்கு தொலைப்பேசி செய்து பேசியவர்கள் யார்? என்பது போன்ற விவரங்களை சேகரித்துள்ள பொலிஸார் அனைவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள பல நடிகர் -நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது முகத்தில் 2 இடங்களில் ஏற்பட்ட காயங்களும் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
இல்லத்தரசிகளின் உயிர்.. அதிலும் குறிப்பாக தொழிலுக்கு வெளியே செல்லாது வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளின் உயிர் என்பது சின்னத்திரையில் ஒலிபரப்பப்படும் நெடுந்தொடர்களே.
இதில் நடிக்கும் பலர் பெரிய நடிகர்களை விட அதிகமான அளவு இல்லத்தரசிகளை தங்களது ரசிகர்களாக கொண்டிருப்பர். ஏனெனில் அவர்கள் நெடுந்தொடர் வாயிலாக தினமும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் உறவினர்கள் போல வந்துவிடுகின்றனர். இதனால் அவர்களது மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பதாகவே உள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகை சித்ராவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகர், நடிகைகள்
குமார் சுகுணா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM