மூல நோய்க்கு நிவாரணமளிக்கும் இடுப்பு குளியல்

Published By: Robert

11 Aug, 2016 | 01:04 PM
image

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்உட்கார்ந்திருப்பதின் அருமை. அவர்கள் தங்களால் சிறிது நேரம் உட்கார முடியாதா..! என்ற ஏக்கம் கூடுதலாக இருப்பவர்கள் ஏராளமானவர்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல செய்தியொன்று வெளியாகியிருக்கிறது.

மூலநோயால்பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அத்துடன் இடுப்பின் இறுதிப்பகுதியும், தொடையின் மேல் பகுதியும் ஒன்றிணையும் இடத்தில்அசௌகரியமான அரிப்பால் தவிப்பவர்கள் ஆகியோர்களுக்கு பிட்ட குளியல் அல்லது இடுப்பு குளியல் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

எம்முடைய குளியலறையில் பாத்டேப்பில் அமர்ந்து குளிக்கும் வசதி ஒரு சிலரிடம் இருக்கும். அதேபோன்றதொரு பாத்டேப்பில் வலி நிவாரண மருத்துவர்கள் இதற்கென பரிந்துரைக்கும் பிரத்யேக மருந்துகளைப் பயன்படுத்தி இவ்வகையிலான குளியலை குளித்தால் இதன் பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

இந்த பாத்டேப்பில் சற்று சூடு பொறுக்கக்கூடிய அளவிலான தண்ணீரை முதலில் ஊற்றவேண்டும். அதன் பிறகு வலி நிவாரண மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் ஒரிரு துளிகள் அதனுடன் கலக்கவேண்டும். பின் பிட்டப்பகுதி மற்றும் இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இடுப்பு பகுதி வரையில் தண்ணீரில் அமர்ந்திருக்கவேண்டும். இப்படி பாத்டேப்பில் அமர்ந்திருக்கும் போது, இந்த குளியலால் ஆசன வாயின் பகுதியிலுள்ள இறுக்கமடைந்த நரம்புகள் மற்றும் தசைகள் இளகி நிவாரணத்தைத் தருகின்றன. இத்தகைய குளியலை வலி நிவாரண மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளவேண்டும் என்பது தான் இதன் முக்கியமான அம்சம் என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளலாம் என்றும், அவசியம் ஏற்பட்டால் மூன்று தினங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர்  S. பிரேம் ஆனந்த், M.D., 

வலி நிவாரண மருத்துவ நிபுணர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04