டெங்கு நுளம்புக்கு எதிரான போராட்டத்திற்காக விமானப் படைக்கு இரு ட்ரோன்கள் நன்கொடை

Published By: Vishnu

19 Feb, 2021 | 01:56 PM
image

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால்  கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள்  இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டது.

கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகளும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரவிடம்   விமானப்படை தலைமையகத்தில் வைத்து  நேற்று கையளிக்கப்பட்டது.

டெங்கு நுளம்புகள்  இனம்பெருகும் இடங்களை  கண்டறியவும், இனப்பெருக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் வான்வழியாக திரவங்கள்  தெளிக்கப்படவேண்டியதை  கண்காணிக்கவும் இந்த கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்படும் என விமானப்படையின் ஊடக பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பம் மூலம், நுளம்புகளின் இனப்பெருக்க இடங்களை வான்வழி காட்சியாகப்பெற்று அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வரைபடமாக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.

மேலும், அவசியமான வேளைகளில் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அவை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் விமானப்படையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க, மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் பி.சோமசிரி மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15
news-image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

2025-06-15 15:49:46
news-image

ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர்...

2025-06-15 16:17:44
news-image

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40...

2025-06-15 14:29:11
news-image

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க...

2025-06-15 14:15:50
news-image

நாட்டின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

2025-06-15 14:03:20