நாட்டில் நேற்றைய தினம் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்டு வாகன சாரதிகளும், ஏழு பாதசாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடந்த விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்ததாகவும், அதற்கு முன்னர் பதிவான விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏழு பேருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.

வாகனம் செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தினார்.

பொறுப்பற்று வாகனம் செலுத்துவதால் ஏற்படும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒரு குறைபாடுள்ள புள்ளி முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.