கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்ச‍ை பெற்று வந்த நடிகர் சூர்யா, கொரோனா தொற்றுக்கு எதிர்மறையாக பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

ஆர்மபத்தில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்தமையினால் சிறிது காலம் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார்.

இந் நிலையிலேயே தற்சமயம் சூர்யா கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக சோதனை மேற்கொண்டுள்ளார் என்று அவரது நண்பர் ராஜசேகர் பாண்டியன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

பெப்ரவரி 7 ஆம் திகதி சூர்யா, தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவித்ததுடன், கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் பெப்ரவரி 11 ஆம் திகதி சூர்யாவின் சகோதரரும், நடிகருமான கார்த்தி தனது டுவிட்டர் பதிவில், கொவிட் -19 க்கு சிகிச்சை பெற்ற பின்னர் வைத்தியசாலையிலிருந்து சூர்யா வெளியேற்றப்பட்டதாக தெரிவத்ததுடன், அவர் சிறிது காலம் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார் என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.