பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் செயலிழப்பு

By T. Saranya

19 Feb, 2021 | 12:29 PM
image

பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் பல இடங்களில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர் நோக்கியுள்ளனர்.

செயலிழப்பு கண்காணிப்பாளரான டவுன் டிடக்டர்  பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகியன செயலிழப்பில் அதிகரிப்பதைக் காட்டியுள்ளது.

செயலிழப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

பயனாளர்கள் செயலிழப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையால் இது  இது உலகளாவிய செயலிழப்பாக தெரிகிறது.

செயலிழப்பு கண்காணிப்பாளரான டவுன்டெக்டரில் கூட இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செயலிழப்பைக் காட்டியுள்ளது, அமெரிக்காவில் அதிகமான செயலிழப்புகள் பதிவாகியுள்ளன.

வட்ஸ்அப்பை ஒப்பிடும்போது இந்த செயலிழப்பு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை அதிகம் பாதித்ததாக தெரிகிறது.

அமெரிக்காவில் சுமார் 4,699 செயலிழப்புகள் காலை 7:51 மணியளவில் பேஸ்புக்கிலும், 1,192 செயலிழப்புகள் இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் மூலமாகவும் பதிவாகியுள்ளன, மறுபுறம் 214 ஆக அதிக செயலிழப்புகளைக் கண்டன.

இந்தியாவில், 68 செயலிழப்புகள் குறைவாக இருந்தன வட்ஸ்அப்பிலும், 87 செயலிழப்புகள் பேஸ்புக்கிலும், 101 செயலிழப்புகள் இன்ஸ்டாகிராமிலும் பதிவாகியுள்ளன.

செயலிழப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right