பாராளுமன்றத்தில் குழப்பநிலை நிலவியதையடுத்து சபை நடவடிக்கைகள் கலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல்போனோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போது, கூட்டு எதிரணியினர்  கறுப்புப் பட்டியணித்து கூச்சலில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்றில் குழப்பநிலையேற்பட்டுள்ளது.

இதனால் சபையமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.