ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றும் முயற்சி - எதிர்க்கட்சி

Published By: T. Saranya

19 Feb, 2021 | 09:03 AM
image

(செ.தேன்மொழி)

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

நீதிமன்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுப்படுத்த வேண்டியது எதிர்கட்சியின் கடமையாகும். 

இந்நிலையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு , ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதுத் தொடர்பில் சபாநாயகரிடம் நாம் வினவினால் , அதற்கு அவர் தனக்கு இன்னமும் அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிவித்து வருகின்றார்.

ஆனால் விசாரணை அறிக்கையிலே , பொறுப்புதாரிகளாக எதிர்தரப்பு அரசியல் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் , அவர்களை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ,  நீதிமன்றத்தினால் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் , அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவொன்று ஆராய்ந்து பார்ப்பது நியாயமானதா? என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது , குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் காண்பிக்கும் முயற்சியோ இதுவென்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  எனினும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் நாம் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு...

2023-03-31 21:24:12
news-image

மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க...

2023-03-31 21:20:54
news-image

6 சர்வதேச சட்ட ஏற்பாடுகளை இலங்கை...

2023-03-31 21:19:15
news-image

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை...

2023-03-31 18:21:45
news-image

செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச் செயன்முறைக்குள் அரசாங்கம் பிரவேசித்துள்ளது...

2023-03-31 21:29:00
news-image

கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர்...

2023-03-31 21:32:03
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : ...

2023-03-31 21:30:27
news-image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும்...

2023-03-31 21:32:24
news-image

பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள்...

2023-03-31 21:31:19
news-image

'ஆசியான்' அமைப்பின் அங்கத்துவ நாடுகளுடனான நல்லுறவை...

2023-03-31 18:22:31
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கட்டம் கட்டமாகவேனும் நடத்தப்பட...

2023-03-31 18:19:22
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் "விஷம்...

2023-03-31 18:16:51