சட்டமா அதிபர் திணைக்களத்தில் 425 பேருக்கு தடுப்பூசி

Published By: Vishnu

19 Feb, 2021 | 07:47 AM
image

அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட சட்டமா அதிபர் திணைக்களத்தின் 425 நபர்கள் இதுவரை ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சட்டமா அதிபர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஸ்ட்ரா ஸெனக்கா கொவிஷி என்ற தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கும், 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளமுடியும். தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, கொத்தட்டுவ, மொரட்டுவ, எகொடஉயன, ஹங்வெல்ல ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில், கம்பஹா, அத்தனகல்ல, நீர்கொழும்பு, சீதுவ, மஹர, பியகம, வத்தளை, மீரிகம, ராகம, மினுவாங்கொட, ஜாஎல, களனி, கட்டான, திவுலபிட்டிய, தொம்பே ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளலாம். களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பண்டாரகம, பாணந்துறை, ஹொரண, மத்துகம ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59