கிண்ணியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று 

Published By: Digital Desk 4

18 Feb, 2021 | 10:12 PM
image

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட நடு ஊற்று பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்காக கணவர் கொழும்பிற்கு சென்று வந்ததாகவும் இறுதியாக அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்வதற்காக கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை அவருடைய குடும்பத்தினருக்கு இன்று (18)மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்  பரிசோதனை மூலம் மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த தகப்பன் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிஞ்சாக்கேணி  சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம்.அஜித் தெரிவித்தார்.

அத்துடன் இவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த குடும்பத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் அவரது வகுப்பு மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறித்த வகுப்பு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக...

2025-03-26 13:46:14
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56