பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மாங்குளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக 18.02.2020 இன்றைய தினம் மாலை 07.00மணியளவில் ரவிகரனது இல்லத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மேலும் பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமைக்காக 15.02.2021 கடந்த திங்களன்று ஏற்கனவே ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.