(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
சபாநாயகரின் அனுமதியுடன் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி இந்த பாராளுமன்ற குழுவை அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற குழு அறையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு வன்முறைகள், பாகுபாடுகள் மற்றும் ஏதாவதொரு பதவியில் தமது திறமை, தகுதி மற்றும் இயலுமைக்கு அமைய பதவி உயர்வு பெறும் போது பெண் என்ற காரணத்தினால் இடம்பெறும் முறைக்கேடுகளை விசாரணை செய்யக்கூடிய முழு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற குழு அவசியமாகும்.
பெண்களுக்கு உரிய இடம், சமநிலை, தாய்க்கு முதலிடம் போன்ற வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டாலும், சமூகத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு பாகுபாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த பாராளுமன்ற குழுவின் ஊடாக பெண்களின் திறமை, இயலுமை மற்றும் தகுதி அடிப்படையில் முன்னேறிச் செல்ல உள்ள தடைகளை தவிர்க்க முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜேரத்ன, கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM