அரச அதிகாரிகள் 50 பேர் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கடந்த அராசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளர்.

இதன்படி, ஜனாதிபதி செயலகம், சுற்றுலா துறை, சுற்றுலாதுறை அமைச்சு, பொறியியலாளர் அலுவலகம், ஊழியர் சேமலாப நிதியம், மின்சார சபை மற்றும் கால்பந்து சம்மேளன அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அதிகாரிகளும் வாக்குமூலமளிக்க அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.