உலகில் கொரோனா தொற்று ஒரு புறம் முடிவின்றி தொடர்ந்து வரும் நிலையில் மறுபுறம் ஆச்சரியமளிக்கும் செய்திகளும் குறைவின்றி வந்த வண்ணமே உள்ளன.

அந்த வகையில் இந்தோனேசியாவில் 25 வயது யுவதி ஒருவர் திடீரென்று கர்ப்பவித்து குழந்தை பிரசவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை உண்டாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள ச்சான்ஜூல்  நகரில் அதிசயமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதாவது காற்று துகள்கள் மூலம் திடீரென கருத்தரித்து குழந்தையை ஈன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் siti zaina என்ற பெண் கூறுகையில் '' தான் வசித்த அறையில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் திடீரென காற்று  தனது  உடலுக்குள் புகுந்ததாகவும் அதனை தொடர்ந்து வயிற்றில் வலி ஏற்பட்டதுடன் வயிறு பெரிதானதாகவும் பின்னர் அப்பிரதேச சுகாதார வைத்தியசாலைக்குச் சென்றதையடுத்து, தான் பெண்  குழந்தை ஒன்றினைப்  பிரசவித்ததாகவும் '' தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி காற்றைவிட வேகமாக பரவி தற்பொழுது வைரலாகியுள்ளது.

தான் எந்தவிதமான தாம்பத்திய உறவும் கொள்ளவில்லை என்றும் காற்று துகள்கள் மூலமே தான் கருவுற்றதாகவும் தெரிவித்திருக்கும் zaina, குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பிறக்கும் போது குழந்தை 2.9kg நிறை உடையதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், உலகில் அரிய நிகழ்வாக இவ்வாறு தாய்யொருவர் மகப்பேற்றுக்கு செல்லும் வரை தான் கர்ப்பமுற்றவர் என்பதை அறிந்திருக்க முடியாது இருக்கும் எனவும், இது ஒரு வியப்பூட்டும் கருத்தரிப்பு எனவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான வதந்திகளை  தடுப்பதற்கு இவ்விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  கன்னிப்பிறப்புக்கள்  எனப்படும்   virgin births in nature are common என்றும், குறிப்பாக பல்லிகள் மற்றும் சுறா மீன்கள் ஆண் துணை  இல்லாமலே குட்டிகளை பிரசவிக்க கூடியவை  எனவும் வைத்திய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கருத்தரிப்பு இல்லாத இனப்பெருக்கமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்த்துள்ளார்.