உலகின் மின்னல் வேக வீரர் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பங்குபற்றும்  போட்டிகளைதான் உலகில் உள்ள அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

காரணம் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது பங்குபற்றிய மூன்று போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

அதேபோல் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற லண்டன் ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கத்தை வென்றார்.

இந்நிலையில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று ஹெட்ரிக் தங்கம் வென்ற சாதனையை நிலைநாட்டுவாரா? என்று எதிர்பார்ப்பு உலக மக்களினிடையே  ஓங்கியுள்ளது.

தற்போது அதற்கான காலம் நெருங்கியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் பங்குபற்றும் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அவர் பங்குபற்றும் போட்டிகளின் நேர அட்டவனை இதோ...