மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டமை காரணமாக லெபனானில் நாடு முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"லெபனானைத் தாக்கிய பனிப்புயலின் விளைவாக, புதன்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி  4:35 மணிக்கு மின் கட்டமைப்பின் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளில் அதிக மின்னழுத்தம் ஏற்றப்பட்டன, அதன் பிறகு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் மின் மின்சாரத்தை துண்டித்துள்ளன," என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது பராமரிப்பு சேவை குழுக்களால் மின்சார தடையை சீர்செய்ய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.