ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வருவதாக எச்சரித்துள்ள பொலிஸார், இதுபோன்ற ஆறு சம்பவங்கள் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டான, சீனக் குடா, சுன்னாகம், புத்தளம், பொல்பித்திகமை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிலேயே நேற்றைய தினம் ஆறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இது போன்ற குற்றங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.