திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், 10 கோரிக்கைகளை முன்வைத்து, வைத்தியசாலை வளாகத்தில் 17 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10.30 மணி வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
வாரத்தில் மேலதிக 8 மணி நேர சம்பளத்தில், 180 நாட்களை நிறைவு செய்த சகல சுகாதார சிற்றூழியர்கள், சமயாசமய ஊழியர்கள் உடனடியாக நிரந்தரமாக்கிக் கொள்ளல், சீருடைக் கொடுப்பனவை 15,000 ரூபாயாக மாற்றுதல், சகல ஊழியர்களுக்கும் விசேட அனர்த்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளல், தாமதமான செவிலியர் நியமனங்களில் விரைவில் பெற்றுக்கொள்ளல், மேலதிக நேர வேலையை முறையில் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைளை அவர்கள் முன்வைத்தனர்.
அத்துடன், வைத்தியசாலை சிற்றூழியர்கள் குறையை நிவர்த்தி செய்தல், முகாமைத்துவ சேவை பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் நியமனம் பெறும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓய்வூதிய உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக பல வருடங்களாகத் தாம் போராடி வருவதாகவும் கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினாலும் இதுவரை ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை எனவும் மிக விரைவில் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM