(செ.தேன்மொழி)

எஹெலியகொட - பரக்கடுவை பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரக்கடுவை பகுதியில் புதன்கிழமை இரத்தினபுரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துருகிரிய பகுதியில் உள்ள பாதாளகுழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளராக சந்தேக நபர் செயற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  சந்தேக நபரை பொலிஸார் தேடிவந்துள்ளதுடன் , இவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.  இதுத் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த பகுதயில் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை நாளையதினம் அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.