மலையகத்தில் புதிய அரசியல் அமைப்பு : தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

Published By: Robert

11 Aug, 2016 | 10:49 AM
image

மலையகத்தில் மீண்டும் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவை மையமாகக் கொண்டே இவ்வமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்றும் அவ்வமைப்புக்கு தேசிய மக்கள் பேரவை என்று பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

இது சம்பந்தமான, முக்கிய கூட்டமொன்று கடந்த 08ஆம் திகதியன்று நுவரெலியா நகரில் உள்ள வர்த்தகர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முதல் சந்திப்பில், கடந்த காலங்களில் பிரதேச சபை தலைவர்களாக, உறுப்பினர்களாக, நகர மாநகர சபை உறுப்பினாகளாக இருந்தவர்களும் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் மலையகத்தின் எதிர்கால கலை, கலாசார, சமூக அபிவிருத்தி, கல்வி தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் தாங்கள் செயற்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தாங்கள் ஒரு தனிக்குழுவாக போட்டியிட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53