மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் அப்பாவி மணிப்பூர் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

எனவே அந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியும் அரசு தந்து கோரிக்கையை ஏற்காததால், தானே முதல்வராகும் எண்ணத்தில் 16 ஆண்டுகால போராட்டத்தை தேன் அருந்தி முடித்து கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் ஷர்மிளாவின் உடல்நலத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த இரகசியத்தை ஷர்மிளாவின் சகோதரர் ஐரோம் சிங்கஜித் வெளியிட்டார். அவர் கூறுகையில், 'ஷர்மிளா தினசரி செய்த யோகா பயிற்சிகளும், அவரின் மன உறுதியும்  தான் அவர் உடல்நலத்துடன் இருப்பதற்கு காரணம்' என்றார்.