ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பங்காளியாக தற்சமயம் சீனா மாறியுள்ளது.
கடந்த ஆண்டு கொவிட் -19 தொற்றுநோயால் ஐரோப்பாவின் பெரும்பாலான முக்கிய பங்காளிகளுடனான அமெரிக்காவின் வர்த்தகம் குறைவடைந்துள்ளமையினால் சீனா இந் நிலையை பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அமெரிக்காவின் 671 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியுடன் ஒப்பிடும்போது, சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 709 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
தொற்றுநோய் காரணமாக 2020 இன் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் சிதைந்திருந்தாலும், அதன் பிற்பகுதியில் அதன் பொருளாதார மீட்சி ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கான தேவையை தூண்டியது.
2020 ஆம் ஆண்டில் வளர்ச்சியைக் கண்ட ஒரே பெரிய உலகப் பொருளாதாரம் சீனா, ஐரோப்பிய கார்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான தேவையைத் தூண்டியது.
இதற்கிடையில், ஐரோப்பாவிற்கான சீனாவின் ஏற்றுமதி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்னணுவியலுக்கான வலுவான கோரிக்கையால் பயனடைந்தது.
"2020 ஆம் ஆண்டில், சீனா ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பங்காளியாக இருந்தது. இந்த முடிவு இறக்குமதிகள் (+ 5.6%) மற்றும் ஏற்றுமதிகள் (+ 2.2%) அதிகரித்ததன் காரணமாக இருந்தது" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகமான யூரோஸ்டாட் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சீனாவின் அதிகாரப்பூர்வ தரவுகளுக்கு ஒத்ததாக இருந்தன, இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் 5.3% அதிகரித்து 2020 ஆம் ஆண்டில் 696.4 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
திங்களன்று வெளியிடப்பட்ட யூரோஸ்டாட் புள்ளிவிவரங்களின்படி, சீனாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக பற்றாக்குறை 199 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 219 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM