கொரோனா அச்சத்துக்கு மத்தியில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான பாதுகாப்பு சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டல், மே 2020 இல் வெளியிடப்பட்ட 'தேந்தெடுக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் / வேலைத்தளங்களில் கொவிட்19 தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான வழிகாட்டல்கள் - தேர்வுகளை நடத்துதல் என்பதற்கு மேலதிகமானது.

இந்த வழிகாட்டல், கல்வி அமைச்சின் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை விசேட இலக்காகக் கொண்டது. மேலும் பொதுமக்களுக்கான கொவிட் தடுப்பதற்கான பொதுவான வழிகாட்டல்களையும் கொண்டமைந்துள்ளது.