வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராமமக்கள் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களது போராட்டம் எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை. மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பலவருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.
தற்போது போராட்டத்தை முன்னெடுத்து எட்டு நாட்கள் கடக்கின்ற நிலையில் வன்னிமாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கூட தங்களது பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறியவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் மாத்திரமே வருகைதந்து தமது பிரச்சனைகளை கேட்டறிந்துகொண்ட நிலையில் தேர்தல் காலங்களில் வருகைதரும் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM