இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 23 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

No description available.

மேற்கிந்திய அணிக்கெதிராக 3 வகையான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்று விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடரிலும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் மற்றும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி பங்கேற்று விளையாடவுள்ளது.

அதன்படி 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் மார்ச் மாதம் 3 ஆம் , 5 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள்தொடர் மார்ச் மாதம் 10 ஆம் , 12 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மார்ச் மாதம் 21 ஆம் திகதியும் 2 ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 29 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.