சீனாவில் ஹைனான் மாகாணத்தில் 108 ஜோடிகளின் திருமண நாள் நிகழ்ச்சியில் 20 அடி உயரத்தில் ரோஜா பூக்களால் உருவாக்கப்பட்ட கரடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

வன்னிங்  நகரில் அமைக்கப்பட்ட இந்த கரடி உலகின் ரோஜா பூக்களால் உருவாக்கப்பட்ட நீண்ட கரடி என்ற கின்னஸ் சாதனயை படைத்துள்ளது.

மெல்லிய உலோக கம்பி உதவியுடன் 48 ஆயிரம் ரோஜா பூக்களை கொண்டு இந்த கரடி உருவாக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

15 அடி 10 அங்குல நீளம் மற்றும் 12 அடி 10 அங்குல அகலம் மற்றும் 20 அடி 2 அங்குல உயரத்திற்கு இந்த ரோஜா கரடி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோஜாக்கள் வாடியபின் செயற்கை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மிகப்பெரிய ரோஜா கரடி மகிழ்ச்சியான நாளின் நினைவூட்டலாக நீண்ட காலமாக காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.