(எம்.மனோசித்ரா)

அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படையினர் வசமே காணப்படுகிறது.

எனவே, அங்குள்ள கடற்படை முகாமை நீக்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கேள்வி : அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கை கடற்படை முகாமை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பதில் : எமது அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் இது தொடர்பில் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படையினர் வசம் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்குள்ள கடற்படை முகாமை அகற்றுதல் தொடர்பான எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.