முழுமையாக முகத்தை மறைக்கும் வகையில் அமைந்த தலைக் கவசங்களை அணிந்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட ஆலோசகர் பதில் சொலிசிட்டர் ஜெனரல் பரிந்தா ரணசிங்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.