இங்கிலாந்தில் எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுப்படும் தலைமை பூனை லாரி திங்களன்று மூன்று பிரதமர்களுக்கு சேவை செய்து  10 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளது. 

இங்கிலாந்தின் 10 டவுனிங் தெருவில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில்  லாரி என்ற பூனையை  எலி பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

எந்தவொரு இங்கிலாந்து அரசியல் கட்சியின் தலைவரையும் விட 14 வயதான டாபி (Tabby) எனும் வீட்டுப் பூனையான லாரி நீண்ட காலம் பதவியை  வகித்துள்ளது. 

லாரி பெப்ரவரி 15, 2011 அன்று லண்டனில் உள்ள நாய்கள் மற்றும் பூனைகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் அலுவலகத்தால் இதை எலி பிடிக்கும் பணியில் அமர்த்தியிருந்தனர்.

இந்நிலையில், லாரிக்கு டுவிட்டர் பக்கத்தில் 438,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

லாரியின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு டுவிட்டர் பதிவில்,

"நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், நான் இங்கு நிரந்தரமாக வாழ்கிறேன், அரசியல்வாதிகள் இங்கிருந்து வெளியேறும் வரை வரை சிறிது நேரம் என்னுடன் தங்குவர். அவர்கள் அனைவரும் விரைவில் அல்லது தாமதமாக வேலையை விட்டு விலகுகிறார்கள். நான் தான் இந்த இடத்தை இயக்குகிறேன் ". என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் கூற்றுப்படி, 

இது உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலருடன் பயணித்ததாகவும், வெளியுறவு அலுவலகத்திலிருந்து சக எலிபிடிக்கும் ஓய்வுபெற்ற பூனையான பாமர்ஸ்டனுடன் சண்டையிடுவதாகவும் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மூலம் சர்வதேச நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுள்ளது.