பொதுஜன பெரமுனவிற்குள் முரண்பாடுகள் தொடர்வதை நன்கு அறிந்திருந்தாராம் ஜீ.எல். பீரிஸ்

Published By: Digital Desk 2

16 Feb, 2021 | 01:17 PM
image

( இராஜதுரை ஹஷான் )

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளமை ஆச்சரியமடையும் காரணியல்ல. பாரிய சவால்கள், போராட்டங்களுக்கு மத்தியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது. கட்சிக்குள் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் உள்ளது என்பதை தனிப்பட்ட முறையில் நன்கு  அறிவேன் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சி தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து நிலவும் கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு  பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது முரண்பாடுகளுக்குள்ளாகியுள்ளவர்கள் அரசியலுக்கு ஒன்றும் புதியவர்கள் அல்ல. ஆகவே அனைவரும் பொறுப்புடனும், பொருமையுடனும் செயற்பட வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல சவால்களை எதிர்க் கொண்டுள்ளோம். எதிர்வரும் வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம் பெறவுள்ளது. இச்சவாலை வெற்றிக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பலவீனமான எதிரக்கட்சி தற்போது நடைமுறையில் உள்ளது. ஆளும் தரப்பினரது கருத்து முரண்பாட்டை எதிர்தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கூடாது.

கட்சியின் உள்ளக பிரச்சினைகளை  பகிரங்கப்படுத்துவது பொருத்தமற்ற செயற்பாடாகும்.பேச்சு சுதந்திரம் உள்ளது என்ற காரணத்திற்காக  பொறுத்தமற்ற வகையில் எவரும் செயற்பட முடியாது.

கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் கூட்டுப்பொறுப்பு காணப்படுகிறது. ஆகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

கல்வி  பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமையாக திறக்கப்படும்.

மார்ச் 15 ஆம் திகதிக்கு பின்னர் மேல்மாகாணத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்கள் இணைத்துக்  கொள்வார்கள்.கொவிட்-19வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு இனி பாதிப்பு ஏற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01