பிரபல ஊடகவியலாளர் எல்மோ பெர்னாண்டோ 75 ஆவது வயதில் காலமானார்.

1967ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்துகொண்ட  எல்மோ பெர்னாண்டோ அறிவிப்பாளராக, செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு இலங்கை வானொலியிலிருந்து விலகி, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க வானொலிச் சேவையில் அவர் இணைந்து கொண்டார். 

பின்னர், 1994 ஆம் ஆண்டு பீபீசியுடன் இணைந்து 20 வருடகாலம் சந்தேஷய சிங்கள நிகழ்ச்சிக்கு அவர் பங்களிப்பு வழங்கியிருந்தார். 

எல்மோ பெர்னாண்டோவின் பூதவுடல் பெலவத்த அறுபிட்டிய பிரதேசத்தில் இலக்கம் 314 டீ என்ற முகவரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 4.30 இற்கு பெலவத்த சென் ஜோன் கத்தோலிக்க மயானத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.