இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவைக்காக ஆன்லைன் முன் கட்டண போக்குவரத்து அட்டை அறிமுகப்படுத்தப்படுவதற்கும் கட்டணம் வசூலிக்க மின்னணு முறையை அமல்படுத்துவதற்கும் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இது தொடர்பான திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கையில் பொதுப் போக்குவரத்துத் துறை தற்போது பண அடிப்படையிலான முறையை நம்பியுள்ளது. பொது பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் முன் கட்டண போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, இந்தத் துறைக்கு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

பணம் செலுத்துவதால் ஏற்படும் அசெள கரியங்களைத் தவிர்ப்பதற்கான நோக்கத்துடன் ஆன்லைன் முன்-கட்டண போக்குவரத்து அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.