லுடெனின் புதிய சோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்த மேலும் 3 இலங்கை வீரர்கள்

Published By: Vishnu

16 Feb, 2021 | 10:53 AM
image

இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்கா குணதிலக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் முன்னதாக தோல்வியுற்ற 2 கிலோ மீற்றர் தூர உடற்பயிற்சி சோதனை சவாலை நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பயிற்சியைத் தொடங்கவிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சுகததாச மைதானத்தில் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கிராண்ட் லுடென் நடத்திய 2 கிலோ மீற்றர் தூர உடற்பயிற்சி சோதனையில் பங்கெடுத்தனர்.

இதன்போது பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க மற்றும் தில்றூவான் பெரேரா ஆகியோர் தோல்வியடைந்தனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சோதனை நடவடிக்கையில் பங்கெடுத்த தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் வெற்றிகரமாக சோதனையை நிறைவுசெய்துள்ளனர்.

தனுஷ்கா குணதிலக்க 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடங்கள் 23 வினாடிகளுக்குள் நிறைவுசெய்தார். அதேபோன்று பானுகா ராஜபக்ஷ 8 நிமிடம் 27 வினாடிகளில் இலக்கினை நிறைவுசெய்தார்.

திருமணத்தின் காரணமாக கடந்த வார சோதனையில் பங்கேற்க முடியாத குசால் மெண்டிஸும் நேற்று தனது உடற்பயிற்சி பரிசோதனையை 8 நிமிடம் 18 வினாடிகளில் நிறைவுசெய்தார்.

புதிய சோதனையின்படி, வீரர்களுக்கு 2 கிலோமீட்டர் ஓட்ட தூரத்தை 8 நிமிடங்கள் 35 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். உடற் சோதயைில் ஒரு வீரர் தோல்வியுற்றால், அவர் 40 நாட்களுக்குள் மற்றொரு சோதனை செய்ய முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55