நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வாகன விபத்துக்களில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்து மோட்டார் சைக்கிள் சாரதிகளும், நான்கு பாதசாரிகள், ஒரு சாரதியும் மற்றும் பயணியொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களில் நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையானது சீராக அதிகரித்து வருகின்றது.

அதன்படி அன்றாடம் 120 வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், அதனால் சுமார் 40 நபர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே கவனயீனமாக வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.