இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 08 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலமாக மொத்தம் 201 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 06 விமானங்களின் மூலமாக 127 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், தோஹாவிலிருந்து இரு விமானங்கள் மூலமாக நாட்டை வந்தடைந்த 102 பயணிகளும் அவற்றுள் அடங்குவர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை இக் காலக் கட்டத்தில் 02 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 74 பயணிகள் நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.

மேலும், இக் காலகட்டத்தில் 83,000 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 316,000 கிலோ கிராம் எடையுடைய பொருட்கள் விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.