இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 482 என்ற இமாலய இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. 

இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 482 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லே என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்கள் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஜேக் லீச்சும் டக் அவுட்டானார். 

தற்போது அணித் தலைவர் ரூட் 2 ஓட்டங்களுடனும், லாரன்ஸ் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

இன்று ஆரம்பமாகும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் கையிலிருப்பில் இருக்க இன்னும் 429 ஓட்டங்கள் தேவை என்ற நிலையுள்ளது.