இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து கவனத்தில் கொண்டு, இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கைப் பொதுமக்களுக்காக மிலானில் உள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போதுள்ள கொவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் வகையில், தேவையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, ரோம் மற்றும் மிலானுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளும் நடத்தப்படும்.

தற்போது நிலவும் கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளிலும் கூட, இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்கத்கது.