வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.  

குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (14) வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் இரவு முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார். 

இதன்போது குறித்த பகுதியில் நின்றிருந்த மரத்துடன் தவறுதலாக மோதி அருகிலிருந்த கிணற்றிற்குள் விழ்ந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த  வேலாயுதம் விஜயகுமார் வயது 41 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.