(நா.தனுஜா)
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப்பகுதியில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய திட்டம் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் காலி வலஹந்துவ தோட்டத்தில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (இணையவழி ஊடாக), தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது விசேட காணொளி ஒன்றினூடாக உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உரையாற்றினார்.
மிகவும் சவால்மிக்க தற்போதைய சூழ்நிலையில், தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இதன்போது குறிப்பிட்ட கோபால் பாக்லே, இலங்கை அரசாங்கத்தினால் முன்னுரிமை அளிக்கப்பட்டுவரும் நீர்வழங்கல், திறன் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளடங்கலான அனைத்து சமூக - பொருளாதார துறைகளினதும் அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு பெருந்தோட்டப்பகுதியில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக இவ்வருடம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காலி வலஹந்துவ வீட்டுத்திட்டமானது, ஏற்கனவே 270 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் இலங்கையில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வகையிலான இந்திய வீடமைப்புத்திட்டத்தின் ஓரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM