(நா.தனுஜா)

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் இயங்குவதையும் நட்டஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவது மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதென்பது ஒட்டுமொத்த நல்லிணக்க செயற்பாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒப்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேசரிக்குத் தெரிவித்தார்.