செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆய்வுக்கலமான பெர்சி, எதிர்வரும் 18 ஆம் திகதி  செவ்வாயில்  தரையிறங்குகிறது.

விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, பூமிக்கு வெளியே வேறொரு கோளில், சிறிய ரக ஹெலிக்கொப்டர் ஒன்றையும் நாசா பறக்க விட உள்ளது.

செவ்வாய் கோளில், நாசா பறக்கவிட உள்ள ஸ்பேஸ் ஹெலிக்கொப்டர், பிறகோள்களை ஆய்வு செய்யும் முறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஆறுகளும் ஏரிகளும் நிறைந்ததாக இருந்த செவ்வாயில் நுண்ணுயிரிகளும் பல்கிப் பெருகியிருந்தன என கருதப்படுகிறது.

செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை அங்கு குடியேறச் செய்யும் சாத்தியங்கள் உள்ளனவா என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய ஆய்வு நோக்கங்களுக்காக இதுவரை 4 ஆய்வுக்கலன்களை நாசா அனுப்பியுள்ளது.

இந்நிலையில், செவ்வாய் கோளை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள 5ஆவது ஆய்வூர்தியான பெர்சிவரன்ஸ் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கவுள்ளது.