சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரிலேயே கொரோனா பாதிப்பு இருந்ததற்கான அறிகுறிகளை உலக சுகாதார அமைப்பு குழு கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் சீனாவிலிருந்தே கொரோனா உலகிற்குப் பரவியது என உறுதியாகிறது.

உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று சீனாவின் வுஹான் நகருக்கு சென்று தீவிர ஆய்வு செய்து வருகிறது. 

இதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பே, சீனாவில் கொரோனா பாதிப்பு இருந்ததற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளதுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் குழு தெரிவித்துள்ளது.

எனினும் சீனாவில் விலங்குகளில் இருந்து கொரோனா பாதிப்புகள் பரவவில்லை என்றும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குழு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.