காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்தின்  ஊடாக  காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும்போது தேவை ஏற்படின் சர்வதேசத்திடம் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்று அரசாங்கம் தெரிவித்தது. 

ஆனால் இந்த காணமல்போனோர் குறித்த அலுவலகத்திற்கு சாட்சி வழங்கும் பாதிக்கப்பட்டோரின் இரகசியத்  தன்மையை பாதுகாப்பதற்காக தகவல்களை பெற்றுக்கொள்வதில்   ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிட்ட பிரதி ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.