( ஆர்.யசி)

மேல் மாகாணத்தில் அதிக அச்சுறுத்தல் பகுதிகளாக கருதப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இன்று  தொடக்கம் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு கொவிட் செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் கொவிட் -19 தொற்றுநோய் பரவல் நிலைமைகள் குறித்து ஆராயும் கோவிட் செயலணிக்கூட்டம் இன்று காலை இராணுவத்தளபதி தலைமையில் கூடிய நிலையில், ஜனாதிபதியின் பரிந்துரை குறித்து இதில் ஆராயப்பட்டுள்ளது. அதற்மைய  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி கூறினார்.

தற்போது எம்மிடம் கைவசம் உள்ள இரண்டரை இலட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு ஏற்றுவதற்கு ஜனாதிபதி விசேட பரிந்துரையை எமக்கு வழங்கியுள்ளார். 

அதற்கமைய இன்று தொடக்கம் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய பொதுமக்கள் மத்தியில் அதிகம் நடமாடும் நபர்கள் மற்றும் விரைவாகவும் அதிகமாகவும் நோய் தொற்றுக்கு உள்ளாவார்கள் என கருதும் நபர்களுக்கு இன்று தொடக்கம்  தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்மைய மேல் மாகணத்தில் இருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.