கடந்த செப்டெம்பர் மாதம் இஸ்ரேலுடனான உறவுகளானது வலுப்பெற்றுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேடஸ் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கான தனது முதல் தூதுவரை நியமித்தது.

அதன்படி மொஹமட் மஹ்மூத் அல் கஜாவை இஸ்ரேலுக்கான தனது தூதுவராக நியமிப்பதாக எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சகத்தின் மூலோபாய தகவல் தொடர்பு பணிப்பாளர் ஹென்ட் அல் ஒட்டாய்பா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

2020 செப்டம்பர் 15 அன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவில் இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ்ஸும் உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதைத் தொடர்ந்து, ஜனவரி 24 ஆம் திகதி, டெல் அவிவில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஒரு நிரந்தர தூதர் நியமிக்கப்படும் வரை இஸ்ரேல் அபுதாபியில் ஒரு தற்காலிக பணிக்கு தலைமை தாங்க ஈட்டன் நாவை நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.