பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட  500,000 டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த ஏழு நாட்களில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி அடுத்த வாரம் சில நாட்களுக்குள் இதன் முதல் தொகுதி நாட்டை வந்தடையும் என கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையில் 189,349 முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.